May 30, 2013

Jabhat al-Nusra - யார் இவர்கள்? என்ன செய்கிறார்கள்? - சிரிய சமர்களத்தில் எழுந்து நிற்கும் இரண்டாம் அணி!!

Jabhat al-Nusra ( جبهة النصرة لأهل الشام Jabhat an-Nuṣrah li-Ahl ash-Shām)

இஸ்லாமிய ஆட்சியை இலக்காக கொண்டு செயற்படும் முஜாஹிதீன்களின் அணி. சுன்னத் வல் ஜமா அறிஞர்களின் வழிகாட்டலிலும், கடந்த காலங்களில் ஆப்கான், பொஸ்னியா, கொசாவோ, செச்னியா, ஈராக் போன்ற பல ஜிஹாதிய களங்களில் போராடிய தீரமிகு போராளிகளின் கூட்டு இது. அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்கி அதில் அஷ்-ஷரீஆ சட்டங்களை நிலை நாட்டி தாகூத்திய (அல்லாஹ் அல்லாத) சக்திகளின் அனைத்து அதிகாரங்களையும் இல்லாதொழிக்கும்ஜிஹாதை சிரியாவில் களமாக திறந்து வி்ட்டுள்ள அணியிது.

அல்-காயிதாவின் பின்புலம் அல்லது மறுவடிவம் என பல ஆய்வாளர்களாலும் இந்த அமைப்பு நோக்கப்படுகிறது. அப்துல்லாஹ் ஆஸம் (ரஹ்), அன்வர் அல் அவ்லாகி (ரஹ்), உஸாமா பின் லாதின் (ரஹ்), முஸப் அல் ஸர்க்கவி (ரஹ்) போன்றவர்களின் சிந்தனை, செயற் தாக்கங்களிற்கு உட்பட்டவர்கள் பலர் இந்த ஜிஹாதிய அணியில் உள்ளனர்.

சோமாலியா, மாலி, யெமன், நைஜீரியா, சீனாவின் ஷின்ஷியாங், தாய்லாந்தின் ஜாலியா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் உள்ள போராளிகள் பலர் இந்த சிரிய ஜிஹாதில் பங்கெடுத்துள்ளனர். அடக்கியொடுக்கப்படும் சீனாவின் ஷின்ஷியாங் முஜாஹித்கள் சிரியாவில் களமாடுவது புருவங்களை உயர்த்த வைக்கிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அமெரிக்கா இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் சேர்த்தது. அது முதல் மேற்குலகிற்கு சிரிய சினிமாவின் வேண்டாத பாத்தரமாகிப்போனது ஜபாத் அல் நுஸ்ரா.

இந்த அமைப்பினரால் தலைவர் என உலகிற்கு இனங்காணட்டப்பட்டவர் Abu Mohammad al-Golani. உலகலாவிய இஸ்லாமிய கிலாபாவின் இலக்கு நோக்கிய பயணத்தில் சிரியா இவர்களை பொருத்த வரைக்கும் ஒரு மைல்கல். சிரியாவில் இஸ்லாமிய ஆட்சியிலன் ஸ்தாபிதம் என்பது உலக இஸ்லாமிய ஆட்சியின் உருவாக்கத்திற்கு முதற் படியாக அமையும் என்பதும் உண்மையே.

சிரிய அல் நுஸ்ரா போராளிகள் அமைப்பின் அடிப்படை ஈராக்கிய ஜிஹாத்தாகும். அதன் முக்கிய செயற்பாட்டாளர்களும், பங்காளர்களும் இப்போத சிரிய களத்தில் நிற்கிறார்கள். “அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் பகிரங்க விரோதிகள்” என இவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர். சிரியாவினுள் எந்த ஒரு அந்நிய தேசத்திற்கும் இடமில்லை எனவும், மேற்கு நாடுகள் சிரியாவினுள் நுழைந்தால் அவர்களையும் எதிர்த்து போராடுவோம் எனவும் இவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள்.

சிரிய சமர்களத்தின் சம காலத்திலேயே தங்கள் அமைப்பினுள் அஷ்-ஷரீஆ சட்டங்களை அமுல் செய்துள்ளனர். ஈராக், லிபியா, சிரியா போன்ற அரபு நாடுகளில் இவர்களிற்கு மெல்ல மெல்ல மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இவர்களது போராளிகள் சண்டை களங்களில் ஆக்ரோஷத்துடன் போராடுவார்கள் என்பது சிரிய தெருக்களில் பிரசித்தம். கூடவே களத்தில் பின்வாங்காது இழப்புக்களையும் தாண்டி தாக்கு பிடிக்கும் ஒரேயொரு போராளிகள் அமைப்பாக அண்மைக்காலங்களில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா வடிவமைத்த சிரிய போராளிகள் அமைப்பில் அல் நுஸ்ராவின் வரவை அமெரிக்கா லிபிய பாடங்களின் அடிப்படையில் அணுக முற்பட்டது. ஆனால் அதற்கும் அப்பால் அவர்களது சிந்தனைகளும், திட்டங்களும் விரிவடைந்த நிலையில் உள்ளது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை அடைந்துள்ளது.

சிரியா முழுதிலுமான தாக்குதல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் அலீபோ சண்டை களங்களில் மகத்தான பணியை ஆற்றியுள்ளனர். சுதந்திர சிரிய இராணுவத்தின் மீதான சிரிய அலவி இராணுவ தாக்குதல்களின் போது அவர்களிற்கு உதவியாக பின்புல தாக்குதல்கள், துணை தாக்குதல்கள், ஊடறுப்பு தாக்குதல்கள் என பல கள முனைகளை திறந்து அவர்களை பல முறை பின் வாங்கள்களிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.

அமெரிக்கா ஜபா அல் நுஸ்ராவை பயங்கரவாத அணி என நோக்க எப்.எஸ்.ஏ. போராளிகளோ அவர்களை நண்பர்களாக பார்க்கிறார்கள். நுஸ்ராவின் தற்கொலை தாக்குதல்கள் பற்றிய மாற்று கருத்தும் இவர்களிடம் உண்டு.

Jabhat al-Nusra வின் தலைமைத்துவ கட்டமைப்பு பற்றிய சரியான தகவல்கள் இதுவரையில்லை. இவர்கள் சுயமாக இயங்குகிறார்களா அல்லது இவர்களிற்கு பின்னால் தேசங்கள் கடந்த தலைமைத்துவம் செயற்படுகிறதா போன்ற கேள்விகளிற்கு துல்லியமான பதில்கள் இதுவரையில்லை. இவர்கள் தங்கள் சமர் களங்களின் போதும், விநியோகங்களின் போது இலத்திரனியல் தொடர்பாலினை முடிந்த வரை தவிர்த்து வருகின்றன். வன் இன் வன் கொன்வர்சேசன் முறை மூலமே இவர்களது பல தகவல் பறிமாற்றங்களும் கட்டளைகளும் நிகழ்கின்றன.

சிரிய சமர் களத்தில் சர்வதேச போராளிகள் என்பது பொஸ்னியாவின் பின்னரான ஒரு நிகழ்வாகும். அரபிகள் அல்லாத உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த களத்தில் பலரும் பங்கு கொண்டுள்ளனர். இதில் குறிப்பான இன்னொரு விடயம் இந்த போராளிகள் தனி நபர்களாக வந்து இந்த சிரிய ஜிஹாதில் பங்கேற்கவில்லை. மாறாக தங்கள் தேசங்களின் போராட்ட அணிகளில் இருந்து தனியான ஒரு பிளட்டூனாக வந்திணைந்துள்ளனர்.

அதாவது உலகலாவிய இஸ்லாமிய விடுதலை போராட்ட அமைப்புக்கள் பலவும் தங்கள் சார்பில் தம் தளபதிகளையும் முஜாஹித்களையும் ஷாம் தேச இஸ்லாமிய ஆட்சியின் உதயத்திற்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை இன்னொரு வரியில் விளங்குமாறு சொல்வதானால் “ சிலுவை யுத்ததத்திற்கு ஆதராவக ஒவ்வொரு கத்தோலிக்க மன்னனும் தன் சேனையின் தளபதி ஒருவரையும் குதிரை படையின் ஒரு பிரிவை அனுப்பி வைத்ததது போல”. இந்த இறுதி வரிகள் மேற்குலகிற்கு நன்றாகவே புரியும்.

No comments:

Post a Comment