Apr 15, 2011

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 03

ஜனநாயகம் (Democracy)

ஜனநாயகம் என்பது முதலாளித்துவ கோட்பாட்டின் அரசியல் வடிவமாகும்,அதாவது இந்த கோட்பாட்டை செயல்படுத்தும் ஆட்சிமுறை ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மக்களுக்காக மக்களே தாங்கள் விரும்பும் ஆட்சிமுறையைக்கொண்டு அந்த மக்களே ஆட்சி செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

எப்போதும் முதலாளித்துவவாதிகள் தங்கள் ஆட்சிமுறையை ஜனநாயகஆட்சிமுறை என்றே குறிப்பிடுகிறார்கள், ஆனால் பல காரணங்களைக் கொண்டுஇந்த கோரிக்கை தவறானது என்று கூறலாம், ஜனநாயகம் என்னும் ஆட்சிமுறைஅமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ கண்டுபிடித்த ஆட்சிமுறையல்ல,அது கிரேக்கர்களின் (Greek) ஆட்சி முறையாகும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பேகிரேக்கர்களும் ரோமானியர்களும் இந்த ஆட்சி முறையை கொண்டிருந்தார்கள்என்பது சரித்திரம் கூறும் உண்மையாகும், மேலும் முதலாளித்துவவாதிகள் மட்டும்இதனை நடைமுறைப்படுத்தவில்லை. மார்க்ஸ் பொது உடமை வாதிகள் தங்களைஜனநாயகவாதிகள் என்றும் தாங்கள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகிறோம்என்றும் வாதிடுகிறார்கள், ஜனநாயக ஆட்சிமுறையின் பிரதான அம்சம் மனிதனைப்படைத்த இறைவன்தான் மனிதனுக்கு வழிகாட்ட சட்டங்கள் வழங்க முடியும்என்பதற்கு பதிலாக மனிதர்களே தங்கள் வாழ்வுக்குரிய சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்பதாகும், அதாவது வாழ்வியல் விவகாரங்களி−ருந்து(இறைநம்பிக்கையை) மதத்தை பிரித்து விடுவது என்பது இதன் பொருளாகும்,இயல்பாகவே சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனை படைத்த இறைவனுக்குஇல்லை அது மனிதனுக்கு உரியது என்ற கருத்து இதற்குள் அடங்கியிருக்கிறது,இந்த முதலாளித்துவவாதிகள். இறைவன் மனிதர்களை சட்டம் இயற்றுவதற்குஅனுமதித்திருக்கிறானா என்பதையோ மனிதனின் சட்டங்களை வாழ்விய−ல்நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளானா என்பதைப் பற்றியோ அல்லதுஇந்த விவகாரத்தை ஆய்வு செய்து முடிவுக்கு வருவதையோ விட்டுவிட்டுஎந்தவிதமான விவாத கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் மனிதர்கள் சிலரைநியமனம் செய்து சட்டம் இயற்றுவதற்கு முற்பட்டு விட்டார்கள்.

முஸ்−ம்களைப் பொறுத்தவரை ஜனநாயகத்தை கடைபிடிப்பது என்பதுஇஸ்லாத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரிக்கும் செயலாகும் (அல்லாஹ்(சுபு)காப்பாற்றுவானாகõ) தெளிவாகவும் முடிவாகவும் உள்ள அனேக குர்ஆன்வசனங்கள் முஸ்−ம்கள் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை மட்டும்தான்அமல்படுத்த வேண்டும் என்பதனையும் மற்ற அனைத்தையும் நிராகரித்துவிடவேண்டும் என்பதனையும் கட்டளையிடுகின்றன, மேலும் இந்த வசனங்களில் எந்தஒரு மனிதன் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லையோஅல்லது அதை அமல்படுத்த வில்லையோ அவனை நிராகரிக்கும் கா öபிர் என்றும்அநியாயக்காரன் என்றும் பாவி என்றும் கூறுகின்றன.

அல்லாஹ் வெளிப்படுத்தியதைக் கொண்டு எவர் ஆட்சி செய்யவில்லையோ அவர்நிராகரித்த காஃபிர் ஆவார். (குர்ஆன் 5:44)

மேலும் எவர் அல்லாஹ் வெளிப்படுத்தியதைக் கொண்டு ஆட்சிசெய்யவில்லையோ அவர் அக்கிரமக்காரர் ஆவார். (குர்ஆன் 5:45)

மேலும் எவர் அல்லாஹ் வெளிப்படுத்தியதைக் கொண்டு ஆட்சிசெய்யவில்லையோ அவர் வரம்பு மீறிய பாவியாவார். (குர்ஆன் 5:47)



ஆகவே யாரெல்லாம் அல்லாஹ்(சுபு) வெளிப்படுத்திய சட்டங்களைக் கொண்டுஆட்சி செய்யவில்லையோ அவர் அல்லாஹ்(சுபு)வின் சட்டம் இயற்றும்அதிகாரத்தை மறுத்தவர் ஆவார், ஜனநாயகத்தை நம்புகிறவர்களைப் பொறுத்தவரை குர்ஆனின் தெளிவான வசனங்களின்படி அவர் ஒரு காöபிர் ஆவார், ஏனெனில்இவ்வாறு அவர் செய்தால் குர்ஆனின் தெளிவான வசனங்களை அவர் நிராகரித்தவர்ஆகிறார், உறுதியான இறைவசனங்களை மறுத்ததின் விளைவாக அவர் காöபிர்என்ற நிலையை அடைந்து விடுகிறார், இந்த கருத்தை அனைத்து இஸ்லாமியமார்க்க தீர்ப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

குöப்பார்களும் அவர்களது அடிவருடிகளான இஸ்லாமிய நாட்டுஆட்சியாளர்களும். தங்களை முஸ்−ம் என்று எண்ணிக் கொண்டுள்ள ஜனநாயகவாதிகளும் அவர்கள் தனிநபர்கள் ஆனாலும் அல்லது ஒரு இயக்கமானாலம் ஒருவிஷயத்தை உணர்ந்தே இருக்கிறார்கள், அதாவது ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதின் மூலம் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் நிராகரிக்கப் படுகின்றன, சட்டம்இயற்றும் இடத்தில் அல்லாஹ்(சுபு)வுக்கு பதிலாக மனிதர்கள்நியமிக்கப்படுகிறார்கள், இந்த காரணத்தினால் தான் ஜனநாயக ஆட்சிமுறையைஅவர்கள் இந்தக் கோணத்தில் எடுத்து வைப்பதில்லை.

அவர்கள் ஜனநாயகத்தில் மக்களே மக்களை ஆட்சி செய்கிறார்கள், இதில்சமத்துவமும் நீதியும் மக்களிடையே செழிக்கும், ஆட்சியாளர்களை விசாரனைசெய்யும் ஜனநாயக ஆட்சிமுறை வெளிப்படையாகவும் கூறுகிறார்கள், ஆனால்ஜனநாயக ஆட்சிமுறை வெளிப்படையாகவும் தெள்ளத் தெளிவாகவும்அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை நிராகரிக்கின்றது, அவனுடைய படைப்புகள்,அதனை பின்பற்றுவதையும் நிராகரிக்கின்றது, ஆகவே ஜனநாயகத்தைஆதரிப்பவர்கள் வேண்டுமென்றே அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள்நிராகரிக்கப்படுவதைப்பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்..

ஜனநாயகத்தின் மற்ற அம்சங்கள் அது கோருவது போல யதார்த்தத்தில்இருப்பது இல்லை, மக்களை மக்களே ஆட்சி செய்கிறார்கள் என்பது பெரிய பொய்,எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் மக்களை மக்களே ஆட்சி செய்வது இல்லை,இது ஒரு அலங்கார வார்த்தையாகும், உண்மையில் மக்கள் சில செல்வாக்குள்ளமனிதர்களால் ஆட்சி செய்யப்படுகிறார்கள், முதலாளித்துவ வாதிகள்அமெரிக்காவையும். பிரபுக்கள் வழி வந்த உயர்குடி பெருமக்கள் (Aristocrat) இங்கிலாந்தையும் சித்தாந்தத்தின் ஆழமான வேர்கள் பதிந்த ஜனநாயகநாடுகளாகும், இந்த நாடுகளிலுள்ள சில செல்வாக்குள்ள மனிதர்கள் தாங்கள்விரும்பும் நபர்களை ஆட்சியாளர்களாகவும் சட்டம் இயற்றும் சட்டமன்றங்களின்உறுப்பினர்களாகவும் கொண்டு வரும் வழிவகைகளை தங்கள் கரங்களில்வைத்திருப்பவர்கள், சட்டமியற்றுகிறவர்களும் சட்டங்களைஅமல்படுத்துகிறவர்களும் இந்த செல்வாக்கு மிக்க மனிதர்களின் நலன்களைபாதுகாக்கும் விதமாக தங்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள், ஜனநாயகத்தில் சமத்துவம். நீதி ஆட்சியாளர்களை விசாரனைசெய்யும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது என்று கோருவதைப் பொறுத்தவரைஇவையெல்லாம் ஏட்டுச் சுரக்காய்தான், உண்மை நிலைகளுக்கும் இதற்கும்எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, அமெரிக்க நாட்டின் மக்கள் நிலையினைஒருவர் உற்று நோக்கினால் இது தெரியும், ஜனநாயகத்தின் காவலர்கள் என்றும்தலைவர்கள் என்றும் மார்தட்டிக் கொள்ளும் இந்த நாட்டில். சமத்துவம். நீதி.அரசை விசாரனை செய்யும் அதிகாரம் இவையெல்லாம் இனம். நிறம். மதம்.செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும்தான்கையில் வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவான உண்மையாகும்.

கருப்பர்களும். இந்தியர்களும். லத்தீன் அமெரிக்கர்களும். ஆசிய கண்டத்தைச்சார்ந்தவர்களும் பிராட்டஸ்டன்ட் (Protestant) அல்லாத கிருஸ்தவர்களும் மேற்குஐரோப்பா பின்னணி இல்லாதவர்களும் விதிவலக்காக ஒரு சிலரைத் தவிர இவர்கள்அனைவரும் அனுபவிக்கும் துயரங்கள் ஒன்றே போதும் ஜனநாயக வாதிகள்கோரும் மேற்கூறிய அம்சங்கள் அங்கு இல்லை என்பதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்.

இறுதியாக இதன் அடிப்படையில் பெறப்படும் கருத்து என்னவெனில்ஜனநாயத்தை ஏற்றுக்கொள்ள முஸ்−ம்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை,ஏனெனில் அது ஒரு குöப்ர் கொள்கையாகும், மேலும் அல்லாஹ்(சுபு)க்கு மட்டுமேஉள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை அது மனிதனுக்கு வழங்குகிறது, எனவேஇதை நிராகரிப்பதும் இதை நிலைநாட்ட முயல்பவர் களையும் இதை பிரச்சாரம்செய்பவர்களையும் இதை ஆதரிப்பவர்களையும் கடுமையாக எதிர்ப்பதும்முஸ்−ம்களின் கடமையாகும்.

தொடரும்...

Sources from warmcall.blogspot.com

No comments:

Post a Comment