Feb 21, 2011

ஈஸா (அலை),இமாம் மஹதி (அலை),தஜ்ஜால் வருகை

இமாம் மஹ்தி, சயீதினா ஈஸா, தஜ்ஜால் ஆகியோரின் வருகையும் எமது கடப்பாடும்

,
ஆதம்(அலை) காலம் தொட்டு இன்றைய காலம் வரை மனிதவர்கமானது பல்வேறு இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்து வந்துள்ளது. இன்றைய தலைமுறையோ ஊழலும் ஒழுக்கக்கேடும் நிறைந்த அதிகார வர்க்கத்தால் உலகில் நிகழும் சீர்கேடுகளை கண்கூடாகப் பார்க்கிறது. முதலாளித்துவக் கொள்கையானது உலகின் ஆதிக்கம் அனைத்தும் செல்வந்தர், சக்திவாய்ந்தோர்களிடம் மட்டுமே இருக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கிவிட்டுள்ளது. இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை இனிமேலும் தங்களால் மாற்ற இயலாது என்ற மனோபாவத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட கிறிஸ்தவர்களும், யூதர்களும் அதனை நிவர்த்தி செய்ய முனையாது, தமது சிந்தனையை திசைதிருப்பி, உலகின் முடிவுகாலம் பற்றியும் மறுவரவு பற்றியும் பேசலாயினர். 'விதியை நம்பியிருக்கும்' இத்தகைய முடிவிற்கு வலுச்சேர்க்கும் விதமாக 'நாம் அந்த இரண்டாவது வரவினால் காக்கப்படுவோம்" எனக் கூறுகின்றனர். இன்று அத்தகைய சூழ்நிலைக்கு ஆட்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களும் இதுபோன்ற எண்ணங்களை பின்பற்றத் துவங்கியுள்ளனர்.

இந்த மனோபாவத்தில் சிக்கிக்கொண்ட சில முஸ்லிம்கள் இக்கால இன்னல்களைத் தீர்க்க முயற்சி செய்யாமல் கிறிஸ்தவர்கள் இரண்டாவது வரவிற்காhக காத்திருப்பதைப்போல தாமும் இஸ்லாமிய ஆதாரங்கள் சிலவற்றை திரித்துக்கூற முனைகின்றனர். இத்தகைய விளக்கங்கள் முஸ்லிம்களை “பிரச்சனைகளின் காரணங்களை அறிந்து அவற்றினை தீர்க்க வேண்டும்" என்று எண்ணுவதினின்றும் திசை திருப்பி இமாம் மஹதியின் வரவிற்காக எதிர்பார்த்திருப்பதை சரியென வாதிடும் போக்கை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.அரசியல் சமூக மாற்றங்களுக்காக போராடுவதில் அல்லது அதற்காக தீவிரமாக இயங்குவதில் இறைவனின் விதியின் பிடியில் அவற்றை ஒப்படைத்துவிடவேண்டியதுதான் எனக்கூறும் இவர்கள் தமது சொந்த வாழ்க்கை என்று வரும்போது தலைகீழான நிலைப்பாட்டையே காட்டுகின்றனர்.

உதாரணமாக அல்லாஹ்(சுபு) உலக மாந்தர் அனைவருக்கும் ‘ரிஸ்க்’ (உணவு, வாழ்வாதாரம்) ஏற்பாடு செய்திருக்கிறான் அல்லது வழங்குகிறான் என்பது முஸ்லிம்கள் அனைவதும் நம்பிக்கை கொள்ளும் விடயம். எனினும் அதற்காக அந்த ‘ரிஸ்க்’ தனது மடியில் வந்து விழும் வரை காத்திராமல் கடுமையாக உழைத்து, தமது நேரம் அனைத்தையும் செலவு செய்து, மனைவி மக்களை பிரிந்து வெளிநாடு சென்று என எல்லாவகையிலும் அதனை தேட முனைகின்றனர். மற்றொரு கோணத்தில் பார்த்தால் தாம் நோய்வாய்ப்படும்பொழுது விதியினை மட்டும் நம்பியிராமல் மருத்துவரிடம் சென்று மாத்திரை சாப்பிடுவது, அபாயகரமான இடங்களை விட்டும் ஒதுங்கி இருப்பது போன்றவற்றை எவ்வளவு கவனமாக இவர்கள் செய்கின்றார்கள்? இத்தனைக்கும் அஜல்(வாழ்க்கை), மௌத்(மரணம்) ஆகியவற்றை நிர்ணயிப்பவன் அல்லாஹ்(சுபு) என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தமது வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் விதியினை நம்பி காத்திராமல் தமது முழு முயற்சியையும் மேற்கொள்வது அவசியம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது எமக்கு புரிகிறது. இந்த சிந்தனை பிழையானதுமல்ல. மாறாக அல்லாஹ்வின் நாட்டம் எனும் விடயத்தை சீரிய சிந்தனையுடன் இஸ்லாத்திலிருந்து புரிந்து கொண்டால் அது இவற்றை அங்கீகரிப்பதையே காட்டுகிறது. எனவே பொதுவிடயம் என வரும்போது அல்லது அரசியல் சமூக மாற்றத்திற்காக பணியாற்றுவது எனவரும்போது எமது சுயநலத்தினாலேயே நாம் அவற்றை விதியில் கையில் ஒப்படைத்துவிடுகின்றோம் என்பதை நாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முன்னறிவிப்புகள் பற்றி விவரிக்கும் ஹதீஸ்கள் நமது சிந்தனைக்கும் நடைமுறைக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை விவரிக்கின்றன. ஆதலால் அதனைப்பற்றி நாம் ஒரு முடிவிற்கு வர இயலாது. நடைமுறையில் சாத்தியமான பிறகே அவற்றினை நாம் புரிந்து கொள்ள இயலும்.

ஸஹாபா (ரலி) பெருமக்களும் அத்தகைய ஹதீஸ்களை அறிந்திருந்தனர். அவர்கட்கும் நடைமுறையில் அவை சாத்தியமான பிறகே புரிந்தன. ஆனால் ஸஹாபாக்கள் அத்தகைய சூழ்நிலை வரும் வரை பொறுமையாக ஒன்றுமே செய்யாமல் காத்திருக்கவில்லை. மாறாக அத்தகைய ஹதீஸ்களை அவர்கள் நடைமுறையில் கொண்டுவர முயற்சி செய்தனர்.

சல்மான் அல் ஃபர்சி (ரலி) கூறியதாக இப்ன் ஹிஸாம் அறிவிக்கிறார்கள்.“கந்தக் போரின் போது குழி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பாறை நடுவில் இருந்தது. அது வெட்டுவதற்கு கடினமாக இருந்தது. அப்பொழுது அங்கு வந்த நபிகளார் நான் இன்னல்படுவதைக் கண்டார். எனது கையிலிருந்த கோடாரியை வாங்கிக்கொண்டார். அதனைக் கொண்டு பாறையை ஓங்கி அறைந்தார். அப்பொழுது அதன் கீழ் ஒரு தீப்பிழம்பு தோன்றியது. மறுமுறை அறைந்தார். மறுமுறையும் பிழம்பு தோன்றியது. மூன்றாவது முறையும் அவ்வாறே ஆயிற்று. அப்பொழுது நபிகளாரை நோக்கி “யா ரசூலுல்லாவே! அங்கு தோன்றிய தீப்பிழம்பின் அர்த்தம் என்ன?” என வினவினேன். அதற்கு நபிகளார். 'ஓ சல்மான்! நீர் அதனைப் பார்த்தீரா?" என்றார். நான் “ஆம்" எனக் கூறினேன். அதற்கு நபிகளார், முதன்முறை அல்லாஹ் (தெற்கிலுள்ள) யெமனை இஸ்லாத்திற்காக திறந்து விட்டான். இரண்டாவதில் வடக்கையும் (அஸ்-ஷாம்), மூன்றாம் முறை கிழக்கையும் (அல்-மஸ்ரிக்) திறந்துவிட்டான்; எனக் கூறினார்கள்.”
இந்த செய்தி ஸஹாபா(ரலி) பெருமக்களிடையே பரவியபொழுது அவர்கள் சும்மா இருந்து வேடிக்கை பார்க்கவில்லை. அத்தகைய நிகழ்வு நடந்தேறும் என்று காத்திருக்கவில்லை. மாறாக அந்த நிலப்பகுதிகளை இஸ்லாத்திற்காக திறந்துவிடும் முழு முயற்சியில் இறங்கிவிட்டனர். எதிர்கால நிகழ்வுகளை பற்றிய செய்திகளை நாம் படிக்கும் பொழுது நாம் இஸ்லாத்தின் சரியான கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும்.

1. முதலாவதாக அத்தகைய முன்னறிப்புகளில் அந்த நிகழ்வுகள் நடக்கும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு செயலில் இறங்குமாறு எமக்கு வலியுறுத்துப்பட்டுள்ளதா என அறியவேண்டும்.உதாரணமாக நபிகளார் ஸஹாபா(ரலி) பெருமக்களிடம் தஜ்ஜாலின் துயரங்களினின்றும் தம்மை கீழ்கண்ட துஆவின் மூலம் பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அபுஹ_ரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்.

“ எவரேனும் (தொழுகையில்) தஷஹத் கூறினால் அவர் அல்லாஹ்விடம் நான்கினின்றும் பாதுகாவல் தேடவேண்டும். 'யாஅல்லாஹ்! நரகத்தின் வேதனையினின்றும், மண்ணறையின் வேதனையினின்றும், வாழ்வு, மரணத்தின் சோதனையினின்றும், தஜ்ஜாலினாhல் வரும் துயரங்களினின்றும் நான் பாதுகாவல் தேடுகிறேன்."எனப்பிராத்திக்க வேண்டும் கூறினார்கள்”

2. அந்த முன்னறிப்பு இடம்பெறும் போது செய்வதற்கு ஏதேனும் கடமைகள் உள்ளனவா எனப்பார்க்க வேண்டும்.

அந்நவாஸ் இப்ன் ஸாம் அறிவிக்கிறார்கள் : ஸஹாபாக்கள் நபிகளாரிடம் கேட்டார்கள் “தஜ்ஜால் எவ்வளவு காலம் பூமியில் இருப்பான்? “ அதற்கு நபிகளார் கூறினார்கள், ' நாற்பது நாட்கள்! அதில் ஒருநாள் ஒருவருடம் போலவும், மற்றைய ஒரு நாள் ஒரு மாதம் போலவும், மற்றைய ஒரு நாள் ஒரு வாரம் போலவும் இருக்கும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்கள் போலவும் இருக்கும்." அதற்கு ஸஹாபாக்கள் 'ஒரு வருடம் போன்ற நாளுக்கு ஒரு நாள் தொழுகை ஈடாகுமா?" என வினவினார்கள். அதற்கு நபிகளார் 'இல்லை அதற்கான காலத்தை கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்." என்றார்கள்.
இந்த ஹதீஸில் முஸ்லிம்கள் ஒரு வருடம் போன்ற நாள் முன்னறிப்பின்படி நடந்தேறும்போது அந்நாளில் தொழுகைக்கான நேரத்தை கணக்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது கவனத்திற்குரியது.

3.அல்லாஹ்(சுபு)வின் தீனை நிலைநாட்டி, பாதுகாத்து அதனை உலகெங்கும் கொண்டு செல்வதற்காக பாடுபடுவோருக்கு அளிக்கப்படும் து}ண்டுதலாக அந்த முன்னறிப்புகள் அமைந்துள்ளவா என ஆராய வேண்டும்.

அபு உமாமாவின் ஹதீஸில் நபிகளார் கூறுகிறார்கள்: 'எமது சமுதாயத்தில் ஒரு பகுதியினர் உண்மையின் பக்கம் நின்று எதிரிகளை வெற்றிகொள்ள, அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை, அதே நிலையில் போராடுவர்!". 'அது எங்கே?" என நபிகளாரை வினவியபொழுது 'ஜெருசலத்தில்" எனப் பதிலளித்தார்.”

இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் வெற்றிக்காக போராடும் குழுவினருக்கு அல்லாஹ் ஊக்கம் அளிக்கின்றமையை கவனத்திற்கொள்க.4. இந்த முன்னறிவிப்புகளில் எமது சிந்தனைக்கும், கண்ணுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி தர்க்கம் செய்யாதிருத்தல்.

“(அவர்கள்) மூன்று பேர் தாம், அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர். (இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம், அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள், இன்னும் (சிலர்) 'ஏழுபேர், அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள். (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான், சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம், இன்னும் அவர்கள் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். (குர்ஆன்: 18:22)
இந்த திருமறை வசனம் தனக்கு முழுமையாக தெரியாத மறைவான விடயங்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூட கருத்துக்கூற வேண்டாம் எனக்கூறும் அல்லாஹ் முன்னறிவிப்புகள் குறித்த விளக்கமில்லாத எமது ஊகங்கள் குறித்து எவ்வாறு தீர்ப்பளிப்பான் என சிந்திக்க வேண்டியுள்ளது.

5. நமது செயலற்ற, நம்பிக்கையில்லாத தன்மைக்கு இந்த ஹதீத்களை ஒருபோதும் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இஸ்லாத்தினை மறுபடியும் நமது வாழ்க்கையில் நிலைநாட்ட நாம் பாடுபடவேண்டும் என்பதை ஒதுக்கித்தள்ளும் விதமாக இந்த ஹதீத்கள் அமையப் பெறவில்லை. அதற்கும் மேலாக 'அல்லாஹ்(சுபு)வின் தீனை நிலைநாட்டுவது இயலாத காரியம். ஏனெனில் அது அல்லாஹ்(சுபு) நாடியபடியே ஒரு நாள் நிறைவேறும். நம்மால் ஏதும் செய்ய இயலாது" என்று கூறுவது அடிப்படையிலேயே தவறான ஒரு அபாயகரமான சிந்தனையாகும்.

இமாம் மஹ்தியின் வருகை!

உம்மு ஸல்மா (ரழி) அறிவிக்கிறார்கள்.“கலீஃபாவின் மறைவிற்குப் பிறகு சர்ச்சை கிளம்பும். அப்பொழுது மதினாவினின்றும் ஒருவர் மக்காவிற்கு வருவார். அவர் இணங்காமலிருந்தாலும் மக்கள் அவருக்கு (கருங்கல் உள்ள கஃபாவின்) மூலைக்கும், மகாமுன் இப்றாகிமிற்கும் இடையே பையத் செய்வார்கள். ஷாம் (சிரியா) பகுதியிலிருந்து அவருக்கெதிராக ஒரு படை அனுப்பப்படும். அப்படையை மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையிலான நீரற்ற பாலைவனம் விழுங்கிவிடும். அதனைக்கண்ட பின்னர் ஷாமிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் மக்கள் அவருக்கு சத்தியப்பிரமாணம் கொடுப்பர். பிறகு குறைஷியரிலிருந்து, ‘கால்ப்’ இனத்தவரைச் சேர்ந்த ஒருவர் (அவருக்கெதிராக) கிளர்ந்தெழும்புவார். அவருக்கு எதிராக படை அனுப்பப்பட்டு அப்படை அவரை வெற்றி கொள்ளும். போரில் கிடைத்த வெற்றிப்பொருட்களை பிரிப்பதில் மனக்கசப்பு ஏற்படும். அப்பொழுது அவர் (மஹ்தி) சரியாகப் பங்கிடுவார். மேலும் மக்கள் மீது நபிகளாரின் வழியில் ஆட்சிபுரிவார். அவர் ஏழு ஆண்டுகள் இருந்து பின்னர் இறந்துவிடுவார். முஸ்லிம்கள் அவருக்காகப் பிரார்த்திப்பார்கள்.” (அபுதாவூத் புத்தக எண்: 36 ஹதீஸ் எண்: 4273)

இந்த ஹதீத் மூலம் அதிகமான விஷயங்கள் தெளிவாக்கப்படுகின்றன. ஒன்று அவர் முஸ்லிம் உம்மாவின் அங்கமாக இருந்து அவர்களுக்குள்ளிருந்தே வருவார். சில ஹதீத்கள் அவர் நபிகளாரின் (ஸல்) வம்சாவழியில் வருவார் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் அவர் அற்புத சக்தி கொண்டவராக இருக்க மாட்டார். அத்துடன் இறைச்செய்தி எதனையும் பெற்றவராகவும் இருக்கமாட்டார். அவர் இறைவன் அருளியபடி சீரிய முறையில் ஆட்சிபுரிந்து கிலாஃபாவை செழித்திடச் செய்வார்.

இந்த ஹதீதில் 'அவர் இணங்காவிட்டாலும்.." என குறிப்பிடப்பட்டிருப்பதினின்றும், மக்கள் அவரை மனமாற்றுவதினின்றும் அவருக்கு தாம் தான் மஹதி என்பது தெரிந்திராது என புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் “கலீஃபாவின் மறைவிற்குப் பிறகு அடுத்து யார் எனத் தீர்மானிப்பதில் சர்ச்சை கிளம்பும்" என்பது மிகத் தெளிவாக உள்ளது. யாருக்கு பையத் கொடுப்பது என்ற சர்;ச்சை முஸ்லிம் உம்மாவிற்குள் தோன்றியிருக்கும். அதன் பின்னரே மஹ்தி அவர்களுக்;கு பையத் கொடுக்க உம்மத் தீர்மானிக்கும் என்ற செய்திகள் எல்லாம், அதற்கு முன்னரே கிலாஃபா என்பது உலகில் நடைமுறையில் இருக்கும் எனத் தெளிவாக்குவதுடன் மக்களுக்கு கலீஃபாவை நியமிப்பது என்பது குறித்தும் நன்கு பரிட்சயமாக இருப்பார்கள் என இந்த ஹதீஸ் விளக்குகிறது. மேலும் இமாம் மஹ்தி வஹீ மூலம் எந்த இறைச் செய்தியும் பெறமாட்டார் என்பதால்; அவர் முஸ்லிம் உம்மாவிடமிருந்து மட்டுமே இஸ்லாத்தை கற்றறிந்திருக்க முடியும். இந்த ஹதீஸில் 'நபிகளார் வழியில் ஆட்சிபுரிவார்" என்பதும் தெளிவாக உள்ளது. எனவே அவர் முஸ்லிம் உம்மாவால், கலீஃபாவாக நியமிக்கப்படும் அளவிற்கு, கல்வி அளிக்கப்பட்டிருப்பார் என்பது தெளிவாகிறது.

எனவே அவர் வரும் வரை முயற்சி எதுவும் செய்யாமல் காத்திருப்பது என்பது தவறான கருத்தாகும். அவரது வருகைக்கு முன்னரே சில முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தேர வேண்டும். அவற்றுள் ஒன்று கிலாஃபாவை நிலைநிறுத்துவதும், முஸ்லிம்களை இஸ்லாமிய வழியில் வாழ வைப்பதுமாகும். இந்த கடமை முஸ்லிம் உம்மத்திற்கு கடமையாக்கப்பட்டுள்ளதே தவிர இமாம் மஹதிக்கு அன்று.

ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் வீழ்ச்சியும்

'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் து}ய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (ஆலு இம்ரான்: 55)


ஈஸா(அலை) அல்லாஹ்(சுபு)வினால் கைப்பற்றப்பட்டார் என இக்குர்ஆனிய வசனம் விளக்குகிறது. மேலும் ஈஸா(அலை) அவர்களின் வருகை பற்றிக் கூறும் எண்ணற்ற ஹதீத்கள் உள்ளன.“எனது ஆத்மாவை தனது கைகளில் கொண்டுள்ளவன் மீதாணையாக! மரியமின் மகன் உங்களிடையே ஒரு நீதிமிக்க ஆட்சியாளராக வந்து இறங்குவார். சிலுவையை உடைத்து, பன்றியைக் கொன்று, ஜிஸ்யாவை நிறுத்திவிடுவார். மிகுந்த வளங்கள் குவியும். உதவியாக வழங்கப்படும் நிதியை ஏற்கும் நிலையில் எவரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஒரு வணக்கமானது இவ்வாழ்கையை விட சிறந்ததாகும்.

”அபு ஹரைரா (ரழி) அறிவித்ததாக புகாரியில் பதியப்பட்டுள்ளதாவது. நபிகளார் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இமாமாக இருக்கையில் மரியமின் மகனார்(ஈஸா) உங்களிடையே இறங்கும் சமயம் உங்களின் நிலை என்ன?அபு-ஹ{ரைரா அறிவித்ததாக சஹஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் தஜ்ஜாலின் ஃபித்னா பற்றியும், தனது பொய்த்தோற்றத்தால் முஸ்லிம்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்குவது பற்றியும் விவரிக்கிறது.

சுழன்றடிக்கும் காற்றைப்போல அவன் மக்களிடையே தோன்றுவான். மக்களை (தன்னை வணங்குமாறு) அழைப்பான். மக்களும் அவனை நம்பி அவ்வழைப்பை ஏற்பார்கள். அவன் வானத்தை கட்டளையிட்டு மழை பொழியும், பூமியை கட்டளையிட்டு பயிர் விளையும். கால்நடைகள் மிகுந்த மயிருடையவனாகவும், பால் நிறைந்த மடியுடையனவாகவும், கொழுத்த வயிறுடையனவாகவும் திரும்பும். அவன் வேறு கூட்டத்தினரை வந்து அழைப்பான். அவர்கள் அவனது அழைப்பை நிராகரித்துவிடுவார்கள். அவன் அவர்களை விட்டுவிடுவான். காலையில் கண்விழிக்கும் பொழுது அவர்கள் தங்கள் உடமைகளை இழந்திருப்பார்கள். அவன் வறண்ட நிலப்பகுதியை கடந்து செல்கையில் “உனது வளங்களை வெளிப்படுத்து" எனக் கட்டளையிடுவான். தேனீக் கூட்;டம் போல அச்செல்வங்கள் அவனைத் தொடரும். இளமை நிறைந்த ஒருவனை அழைத்து தனது வாழ் வீச்சினால் இரண்டாக்கிவிடுவான். பின்னர் இறந்த அந்த மனிதனை அழைப்பான். பிரகாசமான மலர்ச்சியான முகத்துடன் அவன் உயிருடன் திரும்புவான்.” அதன்பிறகு (தஜ்ஜாலின் இந்த நிகழ்சி நடக்கையில்) அல்லாஹ், மரியமின் மகனார் (ஈஸா) ‘அல்-மஸிஹ்’ஹை இறக்குவான். அவர் டமஸ்கஸின் கிழக்கிலுள்ள வெள்ளை மினாரத்தின் அருகில் இறங்குவார். பளீரென்ற ஒரேன்ஞ்ச் நிற ஆடையில் தனது இரு கைகளையும்; இரு மலக்குகளின் இறக்கைகளில் போட்டவராக தோன்றுவார். அவர் குனியும்பொழுது துளிகள் விழும். அவர் நிமிரும் பொழுது முத்துப்போன்ற கற்கள் விழும். கண்ணுக்கெட்டிய து}ரம் வரை பரவும் அவரது மூச்சுக்காற்றில் இறைவிசுவாசமற்ற யாரும் உயிர் தப்பமுடியாது. அவர் தஜ்ஜாலை (பலஸ்தீன நகரான) லுத் எனும் நகரின் வாயில் வரை துரத்திச் சென்று கொன்றுவிடுவார். அல்லாஹ்வின் உதவியுடன் தஜ்ஜாலை எதிர்த்து நின்ற ஒரு குழுவினர் ஈஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர் அம்மக்களின் முகங்களை தடவி சொர்க்கத்தில் அவர்களது நிலை பற்றி எடுத்துரைப்பார்”. இது நடந்த குறுகிய காலத்தில் அல்லாஹ் “நான் எனது படைப்பின் ஒரு மக்களை யாரும் எதிர்த்துப் போராட முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளேன். எனவே எனது அடியார்களை அத்து}ர் ( "சினாய்"யிலுள்ள மூசாவின் மலை) ரில் கூட்டுவீராக" என வஹீ அறிவிப்பான். பிறகு அல்லாஹ் ‘காக்’; மற்றும் ‘மகாக்கை’ எழுப்புவான். அவர்கள் அதிவிரைவில் அனைத்து மணல் மேடுகளினின்றும் ஒன்றுதிரள்வர். அப்படையின் முன்பகுதி தபாரியாஹ் ஏரியை அடைந்து, அங்குள்ள நீரனைத்தையும் பருகிவிடும். அப்படையின் பின்பகுதி அவ்விடத்தை அடையும்போது “இந்த ஏரியில் ஒரு சமயம் தண்ணீர் இருந்ததே" எனக் கூறுவார்கள்;. இதனிடையே ஈஸா (அலை) அவர்களும் அவருடைய தோழர்களும் ஒரு எருமையின் தலை இன்றைய நு}று தினாரைவிட பெறுமதிமிக்கதாக மாறும் அளவிற்கு சுற்றி வளைக்கப்படுவார். ஈஸா (அலை) அல்லாஹ்விடம் உதவியைத் தேடுவார். அல்லாஹ் நக்ஹாஃப்(புழு)வை காக் மற்றும் மாகாக்கின் கழுத்தில் அனுப்புவான். காலை உதிக்கும் வேளையில் அனைவரும் ஒரே ஆத்மாவைப்போல உயிர் துறந்திருப்பர். பிறகு ஈஸா அவர்கள் தமது தோழர்களுடன் (அத்து}ர் மலையினின்றும்) கீழிறங்குவார்.அங்கு இறந்த உடல்கள் இல்லாத ஒரு கையளவு நிலம் கூடத் தென்படாது. அப்பொழுது அல்லாஹ்விடம் இறைஞ்சுவர். ஒட்டகத்தின் கழுத்து போன்ற அளவுள்ள பறவைகளை அல்லாஹ் அனுப்புவான். அவை (இறந்த உடல்களை) து}க்கிச்சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசி எறியும். பிறகு அல்லாஹ் மண்ணாலான வீடோ அல்லது விலங்குகளின் முடிகளாலான வீடோ தப்பமுடியாதபடி மழையை அனுப்புவான். அது பூமியை கண்ணாடிபோல் சுத்தம் செய்துவிடும். பூமியைப்பார்த்து “ கனிகளை முளைப்பித்து புனிதத்தைப் பெற்றுக்கொள்" என (அல்லாஹ்;) கட்டளையிடுவான். பிறகு அவர்கள் மாதுளையின் கனியை உண்டு அதனடியில் இளைப்பாறுவர். ஒட்டகங்கள் அதிக மக்கள் கூட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் சுரக்கும். அப்பொழுது அல்லாஹ் து}ய காற்றினை அனுப்பிவைத்து முஸ்லிம்களின், இறைவிசுவாசிகளின் ஆத்மாவை கைப்பற்றிக்கொள்வான். கேடுவிளைவிப்போர் மட்டுமே எஞ்சியிருப்பர். அவர்கள் கழுதைகள் போல் உறவு கொள்வார்கள். அவர்கள் மீது காலம் தொடங்கும்.”
இந்த ஹதீத்களை கவனித்தால் ஈஸா(அலை) பூமிக்குத் திரும்புவார் எனவும் அவர் முஹம்மது நபியின்(ஸல்) ஷாPஆவின்படி ஆட்சிசெய்பவராக இருப்பார் எனவும் அறிய முடிகிறது. பல ஹதீஸ்கள் அவர் கலீஃபாவுடன் ஆலோசனை செய்வார் எனவும் உள்ளது. அதாவது உலகில் ஏற்கனவே கிலாஃபா இருக்கும் என இவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இது ஈஸாவின்(அலை) வருகையின்போது கிலாஃபா அரசு இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே இன்றைய முஸ்லிம்கட்கு கிலாஃபாவை நிலைநாட்டுவதற்காக ஒரு து}ண்டுதலாக இந்த ஹதீஸ்கள் அமையவேண்டும். ஏனெனில் கிலாஃபா இல்லாது ஈஸாவின்(அலை) மறுவரவு இருக்காது. கிலாஃபா அரசு தஜ்ஜாலின் ஃபித்னாவிலிருந்து காக்கும் என்பதனையும் ஹதீஸ்கள் விளக்குகின்றன. இதனை கீழ்வரும் நபிகளாரின் (ஸல்) கூற்று தெளிவுபடுத்துகிறது.

“இமாம் ஒரு கேடயம் ஆவார். அவரின் பின்னால்; நின்றே நீங்கள் போராடுகிறீர்கள்; அவர் மூலமாகவே நீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்கிறீர்கள்.”
இந்த அடிப்படையில் இமாம் மஹ்தி மற்றும் ஈஸா(அலை) அவர்களின் வருகைக்காக காத்திருந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உட்காந்திருப்பது எந்த வகையிலும் சரியானதன்று. கிலாஃபாவை நிலைநாட்ட பாடுபடாமைக்கு பல முஸ்லிம்கள் இந்த ஹதீஸ்களை காரணம் காட்டுகிறார்கள்;. இமாம் மஹ்தி வரும் வரை இப்பூமியானது அநியாயத்தால் நிறைந்திருக்கும் என்றும், இமாம் மஹ்தி வந்தபிறகே முஸ்லிம் உம்மா புத்துயிர் பெறும் என்றும் அவர்கள் தவறாக எண்ணியுள்ளனர். இஸ்லாத்தினை நிலைநாட்ட பாடுபடுவது ஃபர்ள்; என்ற விளக்கத்தை தவிர மேற்கண்ட ஹதீஸ்களில் வேறெந்த விளக்கங்களும் இருப்பதாக எம்மால் உணர முடியவில்லை.எனவே நாம் அல்லாஹ் (சுபு) அருளியபடி ஆட்சி செய்யும் ஒரு இஸ்லாமிய அரசினை கிலாஃபாவை நிலைநாட்ட பாடுபடவேண்டும். அது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.!

2 comments:

  1. If You Want This Article Download It....

    http://www.4shared.com/document/LE9vz5Rq/isa_mahdi_dajjal.html

    ReplyDelete
  2. ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

    " மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை இட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களோடு இருந்த காலம் அவரை அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால், நீ என்னை மரணிக்க செய்த பின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிக்கும் சாட்சியாளனாக இருந்தாய்." (திருக்குர்ஆன் 5:117,118)

    ReplyDelete